நன்றி மறந்த கட்சி தேமுதிக. - வெறுப்பை கக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 9 மார்ச் 2021 (14:59 IST)

கூட்டணியில் இருந்து விலகிய பிறகு கீழ்த்தரமாக பேசக்கூடாது - ஜெயக்குமார்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பிடிக்கவில்லை என்றால் நண்பர்களைப் போல கைகுலுக்கி பிரிந்துவிட வேண்டும். அதைவிட்டுவிட்டு கூட்டணியில் இருந்து விலகிய பிறகு கீழ்த்தரமாக பேசக்கூடாது என எச்சரித்துள்ளார். மேலும்,
தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுக தான். நன்றியை மறந்துவிட்டு தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசுகிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :