அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

rain
அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்
siva| Last Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:03 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்

குறிப்பாக தென் மாவட்டத்தில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வானிலை ஆய்வு மையம் அறிவித்து அறிவிப்பு ஒன்றின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த எட்டு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :