வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (05:30 IST)

குளித்தலை மதிமுக நகர்மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கூண்டோடு விலகல்

குளித்தலை நகர்மன்றத் தலைவர் பல்லவி ராஜா மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும்  மதிமுகவிற்கு கூண்டோடு முழுக்கு போட்டனர்.
 

 
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி தலைவராக மதிமுகவை சேர்ந்த பல்லவிராஜா இருந்து வருகிறார். மேலும், குளித்தலை, மதிமுக நகர செயலாளராக செயல்பட்டு வந்தார்.
 
இந்த நிலையில்,  குளித்தலை மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, குளித்தலை நகர்மன்றத் தலைவர் பல்லவி ராஜா,  நகராட்சி கவுன்சிலர்கள் சகுந்தலா, கோபிநாத், மாவட்ட பிரதிநிதிகள் மாதேஸ்வரன், ரவிசந்திரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர்கள் பாஸ்கர், மகுடேஸ்வரன் என மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இருந்து  விலகினர்.
 
கரூர் மாவட்டத்தில் குளித்தலை நகராட்சி, மதிமுகவில் இருந்து பல்லவி ராஜா விலகிய சம்பவத்தின் பின்னனியில், மதிமுக முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர் பரணிமணி உள்ளதாக கூறப்படுகிறது.