கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைகோ உதவி


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 17 நவம்பர் 2015 (02:56 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை பகுதி மக்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டு அன்னதானம் செய்தார்.
 
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை ஆயிரம்விளக்கு, வள்ளுவர் கோட்டம், தருமாபுரம்
பகுதிகளில் வெள்ள சேதப் பகுதிகளை பார்வையிட்டார். வெள்ள சேதம் குறித்து அங்கிருந்த மக்களிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அரசு தரப்பில் தேவையான உதவிகளை விரைவில் செய்துதர அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதி அளித்தார்.
 
மேலும், மதிமுக சார்பில் தயாரிக்கப்பட்ட சாம்பார் சாதத்தை அங்கிருந்த பொது மக்கள் அனைவருக்கும் வழங்கினார்.
 
அப்போது, மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, ஆயிரம் விளக்குப் பகுதிப் பொறுப்பாளர் டி.ஜெ.தங்கவேலு உள்ளிட பலர் உடன் இருந்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :