வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (05:50 IST)

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் உரிய கல்லூரிகளில் சேர நாளை (ஜூலை 2) கடைசி நாளாகும்.
 

 
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில், தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 2,939 இடங்களுக்கு முறைப்படி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 
கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 2,939 மாணவர்களில் இதுவரை 2,795 மாணவர்களுக்குச் சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 144 மாணவர்களுக்குச் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும்.
 
சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் ஜூலை 2 மாலை 5 மணிக்குள் உரிய மருத்துவக் கல்லூரியில் உடனே சேர வேண்டும். அதன் பிறகு செல்லும் மாணவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.