வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2016 (16:03 IST)

வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்கவிட்டால் கடும் நடவடிக்கை - தேர்தல் ஆணையம்

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் தேதியான மே 16ம் தேதி அன்று தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
 

 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ”தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் இன்று வரை பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாக 1,48,390 புகார்களும், தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 440,95 புகார்களும் பெறப்பட்டன.
 
நிறுவன பணியாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
 
இதுவரை 38 ஆயிரம் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 3,200 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி கூறியுள்ளார்.