திருமணமான பெண்ணிற்கு செக்ஸ் டார்சர்

Mahalakshmi| Last Updated: வியாழன், 28 மே 2015 (13:03 IST)
திருமணமான இளம்பெண்ணிற்கு செல்போனில் செக்ஸ் டார்சர் கொடுத்ததால் சம்மந்தபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான
கூடுவாஞ்சேரி அருகே ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஒரு திருமணமான பெண்ணை அதே அலுவலகத்தை சேர்ந்த மோகன், இளங்கோவன் மற்றும் வெங்கட் ஆகியோர் கேலி செய்துள்ளனர்.

மேலும் செல்போனில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசுவது, ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதுகுறித்து அப்பெண் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சம்மந்தப்பட்ட 3 நபர்களையும் கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :