திருமணத்திற்கு இ-பாஸ் அனுமதி கிடையாது?! – தளத்தில் ஆப்ஷன் நீக்கம்!

Prasanth Karthick| Last Modified திங்கள், 17 மே 2021 (14:19 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உள்ளதால் இ-பாஸ் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் திருமணத்திற்கான ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அவசியமின்றி வெளியூர்களுக்கு பயணிப்பதை தவிர்க்க இ-பாஸ் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக தொழில், திருமணம், மருத்துவ அவசரம் உள்ளிட்டவற்றிற்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இ-பாஸ் பதிவு தளத்தில் திருமணத்திற்கு செல்லுதல் என்ற ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணத்திற்காக வெளியூர் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :