கட்ஜூ கூறிய கருத்து: நீதித் துறையையே இழிவுபடுத்தும் முயற்சி - கருணாநிதி

Suresh| Last Updated: புதன், 23 ஜூலை 2014 (12:04 IST)
உச்ச நிதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறிய கருத்து நீதித் துறையையே இழிவுபடுத்தும் முயற்சி என்று தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது
குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நீதித்துறையின் மீதும், நீதிபதிகள் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. “சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்“ அமைந்து, விருப்பு-வெறுப்பு, வேண்டுதல்-வேண்டாமை அகற்றி, நடுநிலை நின்று தீர்ப்பும் கருத்துகளும் வழங்கிட வேண்டியவர்கள் நீதிபதிகள்.

நீதிபதிகள் பொறுப்பில் இருக்கும் போதும், ஓய்வுபெற்ற பிறகும் நடுநிலை தவறாது நடந்திட வேண்டியவர்கள். ஆனால் அண்மைக்காலமாக ஒரு சிலர் அந்த இலக்கணத்தை மறந்து, மனம் போனபடி கருத்துகளை அறிவிப்பது, ஜனநாயகத்தின் மிக முக்கியமான- நம்பகத்தன்மை வாய்ந்த நீதித்துறை எனும் தூணில் துளை போடுவதைப் போல பலவீனப்படுத்தி வருவதை நமது நாடு கண்டு வருகிறது.

நீதிபதி மார்கண்டேய கட்ஜூ சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2004 ஆம் ஆண்டு நவம்பரில் பதவிக்கு வந்து, ஓராண்டு காலமே அந்த பதவியில் இருந்து, அதன் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் சில காலம் இருந்து ஓய்வுபெற்றவர். 2004-2005 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக கட்ஜூ இருந்தபோது என்ன நடைபெற்றது என்பதை அவருடைய “முகநூல்“ பக்கத்தில் வலைதளம் ஒன்றில் ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்து அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்திலோ அல்லது நீதித்துறையின் நேர்மையான, சுதந்திரமான செயல்பாடுகளிலோ ஒரு போதும் தலையிட்டதில்லை என்றும், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் யார் பெயரையும் பரிந்துரை செய்ததில்லை என்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு முதலமைச்சர் மிகவும் மதிப்பளித்த காரணத்தினால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தாம் பதவி வகித்த ஓராண்டு காலத்தில் தமக்கு எந்த ஒரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :