தீர்மானம் போட்டாச்சு. சுப்ரீம் கோர்ட்டுக்கும் போயாச்சு.. அப்புறம் எதுக்கு அனைத்து கட்சி கூட்டம்: காமராஜ் எம்.எல்.ஏ
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் கட்சிகள் சார்பில் தனித்தனியே நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளவை.
ஒரே விவகாரத்திற்காக தனித்தனியாகவும், திரும்ப திரும்பவும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், ஏற்கனவே சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது மக்களை ஏமாற்றும் நாடகம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீங்க ஒரு தீர்மானம், திமுக ஒரு தீர்மானம், அதிமுக ஒரு தீர்மானம்… இப்போ திரும்பவும் ஒரு அனைத்து கட்சித் தீர்மானம்! எதுக்குய்யா?"என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எதுக்கு அனைத்து கட்சிக் கூட்டம்? என்றும் வினவியுள்ளார். பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே இதுபோன்ற கூட்டங்களும் தீர்மானங்களும் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் இந்த நேரடி விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையா என்ற வாதம் தற்போது பொதுவெளியிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Edited by Siva
