திருமணம் செய்து வைக்க சொல்லி பெற்றோரை வற்புறுத்திய இளைஞர் – கடைசியில் நடத்திய விபரீதம்!

Last Updated: சனி, 24 அக்டோபர் 2020 (10:49 IST)

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி தற்கொலை முயற்சி மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியைச் சேர்ந்தவர் சோந்தவர் இளைஞர் மணி. 26 வயதாகும் இவர் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை என்பதால் மன விரக்தியில் இருந்துள்ளனர். இதையடுத்து வீட்டில் அறைக்குள் சென்று கத்தியால் கழுத்தை அறுத்துக் கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அறையில் இருந்து சத்தம் வராததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்து கதவை உடைத்து கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் ரத்தக் காயத்தோடு இருந்த மணியை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :