ஜாதி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற இளைஞர்..

Arun Prasath| Last Modified திங்கள், 24 பிப்ரவரி 2020 (17:27 IST)
கரூரில் ஜாதி கொடுமையால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இதனிடையே இருவரும் ஒரே ஜாதியாக இருந்தாலும், வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், சரவணனை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளார்கள். மேலும் சரவணன் தனது குடும்பத்துடன் புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வந்த வீட்டை அதிகாரிகளின் உதவியோடு இடிக்க முயன்றுள்ளனர்.

இது தொடர்பாக சரவணன், மாவட்ட ஆட்சியர், அலுவலகம், காவல் நிலையம் ஆகிய இடங்களில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த காவல் துறையினர், சரவணனை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :