ஆபாச படத்தால் உயிரிழந்த 8 மாத குழந்தை: பலாத்காரம் செய்த இளைஞன்

ஆபாச படத்தால் உயிரிழந்த 8 மாத குழந்தை: பலாத்காரம் செய்த இளைஞன்


Caston| Last Modified சனி, 27 ஆகஸ்ட் 2016 (16:15 IST)
பொள்ளாச்சி அருகே ஆபாச படம் பார்த்த இளைஞன் ஒருவன் தன்னுடைய காம பசிக்கு 8 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
பொள்ளாச்சி அருகே தென்னை நார் செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்த பீகாரை சேர்ந்த தம்பதிகள் தங்கள் 8 மாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றனர். அவர்கள் வேலைக்கு சென்று திரும்பி வந்த போது குழந்தை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார், அங்கிருந்து தப்பி சென்றிருந்த சஞ்சீத் என்ற இளைஞனை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
 
அவனிடம் நடத்திய விசாரணையில் அவன், ஆபாச படம் பார்த்து சைக்கோவாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்த 8 மாத குழந்தையை அந்த இளைஞன் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.
 
குழந்தை அழ ஆரம்பித்ததும் அதனை தரையில் ஓங்கி அடித்துள்ளான். இதனால் குழந்தைக்கு ரத்தம் வழிந்தோடியது. பின்னர் குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு தப்பித்து ஓடியுள்ளான்.


இதில் மேலும் படிக்கவும் :