புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 29 மே 2024 (10:57 IST)

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை செய்த 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது
 
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜா என்ற நபர் சிகிச்சைக்காக வந்த நிலையில் அவரை மருத்துவமனை காவலாளிகள் உட்பட ஊழியர்கள் திருடர் என நினைத்து சரமாரியாக அடித்ததாகவும் இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
 
மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளை திருட முயன்றதாக ராஜா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவிதனது கணவர் சிகிச்சைக்காக தான் அந்த மருத்துவமனைக்கு சென்றார் என்றும் அவரை திருடர் என நினைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தாக்கி கொன்று விட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
 
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காவலாளிகள் உள்பட 12 பேரை கைது செய்துள்ளனர். காவலாளிகள் சரமாரியாக அனுப்பியது அடித்ததில் ராஜா என்ற நபர் மயங்கி விழுந்ததாகவும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாகவும் முதல் கட்ட காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெயரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran