தொடர்புடைய செய்திகள்
- முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!
- பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!
- மின்சார வாரிய தலைமையகத்தில் 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்.. ரகசிய தகவல்கள் திருட்டு?
- பாட்டிலுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் அதிகமாக வாங்கிய 23 பணியாளர்கள் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை...!
- சூலூர் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு.. கைதான இருவரும் கை, கால்களில் மாவுக்கட்டு, நடக்க முடியாததால் ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்த போலீசார்
கருணாநிதி பிறந்த நாளில் கொடிக்கம்பம்.. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.. இருவர் காயம்..
காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சாலை ஓரத்தில் திமுக கொடிக்கம்பம் நட முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சார கம்பி மீது கொடிக்கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சோக சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், சாலைகளிலும் நடைபாதைகளிலும் சட்டவிரோதமாக கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்களை வைக்கச் சொல்லி ஏற்பாடு செய்த அரசியல் கட்சியினரையும், அத்தகைய விதிமீறல்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தத் தவறிய அரசு அதிகாரிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஏற்கனவே இது போன்ற பேனர் மற்றும் கொடிக்கம்ப விபத்துகளால் பல அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ள நிலையிலும், எவ்வித தார்மீக உறுத்தலும் இல்லாமல் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து பொது இடங்களை ஆக்கிரமிப்பவர்கள் அறிவு கெட்ட சமூக விரோதிகளே என்று சமூக ஆர்வலர்கள் சாடி வருகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களின் சுயநலப் போக்கை விடுத்து, மனித உயிர்களின் மதிப்பை உணர வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
Edited by Siva
