பெண் காவலரை ஆபாசமாக படம் பிடித்த சக காவலர்: பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி


Caston| Last Updated: வியாழன், 9 ஜூன் 2016 (13:46 IST)
விருதுநகரில் பெண் காவலரை சக ஆண் காவலர் ஒருவர் ஆபாசமாக படம் பிடித்து அதனை காட்டி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
விருதுநகர் அரசு மருத்துவமனையில் காவல் கட்டுப்பாடு மையம் உள்ளது. காரியாபட்டி, மாந்தோப்பு மோதலில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர், அங்கு பாதுகாப்பு பணியில் ரமாபிரபா, அனுசுயா, உதயகுமார் ஆகியோர் இருந்தனர்.
 
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் ரமாபிரபா, அனுடியா ஆகியோர் அங்குள்ள செவிலியர் அறையில் படுத்து உறங்கி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ரமாபிரபாவின் உடை விலகி இருந்துள்ளது, இதனை பார்த்த ஆண் காவலர் உதயகுமார் செல்போனை எடுத்து ரமாபிரபாவை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
 
புகைப்படம் எடுக்கும் சத்தம் கேட்டு எழுந்த ரமாபிரபா சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து உதயகுமார், தான் எடுத்த ஆபாச படங்களை காட்டி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்சித்துள்ளார்.
 
அவரிடம் இருந்து தப்பி ரமாபிரபா காவல் துறையில் புகார் அளித்தார். இதன் பேரில் உதயகுமார் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :