திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 மே 2025 (12:09 IST)

டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு நடக்கிறது: மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து..!

Madurai Court
டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு நடக்கிறது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
டாஸ்மாக் ஊழல் குறித்து பேட்டி அளித்ததற்காக இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, அதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோதம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே அரசே மது விற்பனை செய்கிறது. ஆனால் அதில் கூட ஊழல் என்பதை அனுமதிக்க முடியாது. ஊழல் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை பார்க்கும்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு நடப்பது மட்டும் தெரிகிறது," என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக, டாஸ்மாக் மேலாளர் ராஜேஸ்வரி மற்றும் ஊழியர் செல்வம் ஆகிய இருவரும் இணைந்து வசூல் வேட்டை நடத்துவதாக, இரண்டு ஊழியர்கள் பேட்டி அளித்திருந்தனர். இந்த பேட்டிக்கு பிறகு, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran