மதுரையில் பள்ளி-கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் பீதி

Ashok| Last Updated: திங்கள், 14 டிசம்பர் 2015 (14:28 IST)
மதுரையில் அண்ணாநகர் பகுதியில்
உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக செல்போனில் வதந்தியை கிளப்பிய நபர் குறித்து, சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள 5 பள்ளிகளுக்கும் 1 கல்லூரிக்கும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை போலீஸ் ஒருவர்குக்கு மர்ம நபர் செல்போனில் தெரிவித்துள்ளது. இதையடுத்து மதுரை அண்ணாநகரில் உள்ள பெண்கள் கல்லூரி மற்றும் சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளி, அண்ணாநகர் தனியார் பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையால் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு வந்த மாணவ மாணவிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேர சோதனைக்கு பின்னர் வதந்தி என்று தெரியவந்தது. இதையடுத்து கல்லூரிக்குள் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அண்ணாநகர் தனியார் பள்ளியில் வெடிகுண்டு சோதனையால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. 3 பள்ளிகளில் சோதனைக்கு பின்னர் புரளி என்று தெரியவந்ததால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்ட தொடங்கின.
இந்நிலையில் வெடிகுண்டு பீதியை கிளப்பிய நபர் குறித்து மதுரை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த இடத்திலிருந்து அந்த மர்ம நபர் பேசினர் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :