மதுரையை கலக்கும் மாஸ்க் பரோட்டா: கொரோனா கொடுத்த க்ரேயிட்டிவ் ஐடியா!

Sugapriya Prakash| Last Modified புதன், 8 ஜூலை 2020 (10:15 IST)
மதுரையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் பரோட்டா விற்பனைக்கு வந்துள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 3,616 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,616 பேர்களில் 1,208 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது.  
 
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விழிப்புணர்வுகளை அரசு தரப்பிலும் போலீஸ் தரப்பிலும் வழங்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில், மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு விற்பனையிலும் அசத்தி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :