வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (22:33 IST)

மதிமுக பிரமுகர் டாக்டர் சரவணன் பாஜகவில் ஐக்கியம்

மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்தார்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகினார். 
தனது ராஜினாமா கடிதத்தை வைகோவிற்கு அனுப்பி வைத்தார்.
 
இந்த நிலையில், அவர் எதிர்கால அரசியல் குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்தார்.
 
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மதுரை வருகை தந்தார். அப்போது, அவரது முன்னிலையில் டாக்டர் சரவணன் மற்றும் ஆதரவாளர்கள் பாஜகவில் இணைந்தனர்.
 
பாஜகவில் இணைந்த டாக்டடர் சரவணுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.