1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai Bench Orders Detailed Report on Encroachers of Madurai Meenakshi Amman Temple Properties

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார் யார்? சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் யார் யார், ஆக்கிரமிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவிலின் சொத்துக்களை மீட்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடம் எப்போது நவீன வசதிகளுடன் கூடிய வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்றும் கேள்வி எழுப்பினர். 
 
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த சேதமடைந்த கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'வீர வசந்த ராயர் மண்டபத்தின்' புனரமைப்பு பணிகள் தற்போது எந்த நிலையில் உள்ளன, அவை எப்போது முழுமையாக முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
இந்த முக்கியக் கேள்விகள் அனைத்திற்கும் தகுந்த விளக்கங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களை பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மதுரை மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Webdunia