தொடர்புடைய செய்திகள்
- வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல் மோசடி.. நீட் தேர்வை மாணவர்களுக்கு பதில் எழுதிய டாக்டர்கள்...!
- தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...
- தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..
- ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...
- திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...
மதுரை எய்ம்ஸ் ஆகஸ்ட் மாதத்தில் திறப்பு? மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகம்
மதுரை தோப்பூரில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 220 ஏக்கர் பரப்பளவில், ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான செலவில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் இந்த பிரம்மாண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. தற்போது, மாணவர்களுக்கான வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் மற்றும் விடுதி கட்டிடங்கள் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் 90% நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
மொத்தம் 33 மாதங்களுக்குள் ஒட்டுமொத்த கட்டுமானத்தையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 24 தனித்தனி கட்டிடங்கள் இங்கு அமையவுள்ளன. முதற்கட்ட பணிகள் 18 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வளாகத்தில் 900 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மாணவ-மாணவியர் விடுதிகள், குடியிருப்பு வளாகங்கள், விளையாட்டுத் திடல் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட அரங்கம் ஆகிய வசதிகள் இடம்பெறுகின்றன. அடுத்த மாதம் இந்த கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் திறக்கப்பட்டால், தென் தமிழக மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைப்பதுடன், மருத்துவ மாணவர்களின் கல்வித் தரமும் உயரும் என்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
Edited by Siva
