1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madras High Court Dismisses Anticipatory Bail Petition of Former DMK Minister Anitha Radhakrishnan Over Objectionable Remarks Against CM Vijay

முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த ஜூன் 20, 2026 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
 
இவ்வழக்கின் விசாரணையின்போது, அரசுத் தரப்பில் அனிதா ராதாகிருஷ்ணனின் சர்ச்சை பேச்சு அடங்கிய முழு விவரங்கள் அடங்கிய ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை முழுமையாகப் படித்துப் பார்த்த நீதிபதி, கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். "ஒரு முன்னாள் அமைச்சராகவும், தற்போது மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவர், பொதுவெளியில் எப்படி இது போன்ற தரக்குறைவான மொழியைப் பேசிப் பயன்படுத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், "அவர் ஒன்றும் விவரம் தெரியாத சாமானிய மனிதர் கிடையாது. நாட்டின் மிக உயரிய முதலமைச்சர் பதவிக்கு அவர் குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்க வேண்டாமா?" என்று நீதிபதி அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். இதையடுத்து, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு திமுக வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தீவிரமாகும் சூப்பர் எல் நினோ!.. வரலாறு காணாத சம்பவம் இருக்கு!. வானிலை ஆய்வாளர் பகீர்!..