1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 அக்டோபர் 2025 (09:26 IST)

தமிழகம் நோக்கி நகர்கிறதா காற்றழுத்த தாழ்வு மையம்? வானிலை முன்னெச்சரிக்கை..!

தமிழகம் நோக்கி நகர்கிறதா காற்றழுத்த தாழ்வு மையம்? வானிலை முன்னெச்சரிக்கை..!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
 
இந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி நகர்வதால், மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிதமான கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
Edited by Siva