சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை

Suresh| Last Modified வியாழன், 11 டிசம்பர் 2014 (08:09 IST)
உதகை விரைவு நீதிமன்றம், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கோத்தகிரியில் வெஸ்ட் புருக் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய லூர்து. கூலித்தொழிலாளியான இவர், கடந்த 23.10.2010 அன்று அவரது குடியிருப்புக்கு அருகில் வசித்துவந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் அந்த சிறுமியிடம், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்த வழக்கில், மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சர்வமங்கலா தீர்ப்பளித்தார். குற்றவாளி லூர்துவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த முதியவர் லூர்துவுக்கு மனைவி, மகன் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :