மதுபானக் கடைகள் விற்பனை நேரம் குறைப்பு...

Sinoj| Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (21:37 IST)

புதுச்சேரியில் மதுபானக் கடைகள் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானக்கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை முதல் இரவு 11 மணிவரை இயங்கிவந்த மதுபானக் கடைகள் தேர்தல் காலத்தை ஒட்டி இனிமேல் ஒருமணிநேரம் குறைக்கப்பட்டு இரவு 10 மணியுடன் கடைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாலை 5 மணி மணிவரைதான் குடோன்கள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :