லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் மரணம்! – உடல்நல குறைவு காரணம்!

lalitha
Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2020 (08:20 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் உடல்நல குறைவால் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சி லலிதா ஜுவல்லரியில் மர்ம கும்பல் ஒன்று நூதனமான கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது. இதுதொடர்பான விசாரணையில் திருவாரூரை சேர்ந்த முருகன் என்பவரும், அவரது கூட்டத்தாரும் பிடிபட்டனர். இந்த முருகன் மீது ஏற்கனவே வங்கி கொள்ளை போன்ற வழக்குகளும் இருந்துள்ளது.

கைதாகும் போதே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் முருகன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் உடல்நலம் மிகவும் மோசமானதால் அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :