விஜய் இன்னும் நடிகர், டான்சர் தான்.. குஷ்பு கடும் விமர்சனம்..!
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய விமர்சனங்களுக்கு பாஜக தரப்பிலிருந்து காரசாரமான பதிலடிகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு , விஜய்யின் அரசியல் பாணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் இன்னும் விஜய்யை ஒரு நடிகராகவும், நடன கலைஞராகவும் மட்டுமே பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், அரசியல் மேடை நாகரிகம் என்பது மிக முக்கியம் என்றார்.
ஒரு கட்சியின் தலைவரே மாநாட்டு மேடையில் நடனமாடுவது முறையா என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என குஷ்பு சாடினார். "ஒருவேளை இது அவரது தனிப்பட்ட அரசியல் பாணியாக இருக்கலாம், ஆனால் மக்கள் அவரை இன்னும் ஒரு அரசியல் தலைவராக அங்கீகரிக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்குத் தகுந்த பதிலடியை தங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்குவார் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். குஷ்புவின் இந்த நேரடி விமர்சனம் தவெக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva