வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 11 மே 2015 (17:36 IST)

உங்களால் குற்ற உணர்வின்றி உறங்க முடியுமா? சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து குஷ்பு

சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது தொடர்பாக, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.
 
இந்தத் தீர்ப்பையொட்டி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்து:
 
"விடுவிப்பு என்ற ஒரு வார்த்தை உங்கள் குற்ற உணர்ச்சியை போக்கிவிடாது. 18 ஆண்டுகள் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இப்போது விடுதலையடைந்துள்ளீர்கள். ஆனால், உங்களால் குற்ற உணர்வின்றி உறங்க முடியுமா?" என்று குஷ்பூ கூறியுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, குஷ்புவின் கடந்த கால அரசியல் நிலைப்பாட்டை பற்றியும், திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறியது பற்றியுமான விமர்சனங்கள், அவரது பதிவுக்குப் பின்னூட்டங்களாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன.