புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 24 ஜூலை 2025 (16:02 IST)

குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற குன்றத்தூர் அபிராமி! - தமிழகத்தை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Kundrathur abirami

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே விஷம் வைத்துக் கொன்ற வழக்கில் இன்று குற்றவாளி அபிராமிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

 

குன்றத்தூரை சேர்ந்த விஜய்யின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ போட்டுக் கொண்டிருந்த அபிராமிக்கு, அதே பகுதியில் பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வந்த மீனாட்சி சுந்தரத்துடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. 

 

அவர்கள் சேர்ந்து வாழ விரும்பிய நிலையில் அதற்கு இரண்டு குழந்தைகளும் தடையாக இருப்பார்கள் என்பதால், கடந்த 2018ம் ஆண்டு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்துக் கொடுத்து துள்ளத்துடிக்கக் கொன்றார் அபிராமி. இந்த சம்பவம் அன்று தமிழ்நாட்டையே உலுக்கியது. குழந்தைகளை கொன்ற பிறகு மீனாட்சி சுந்தரத்துடன் கேரளா சென்று புதிய வாழ்க்கை வாழ திட்டம்போட்டிருந்த அபிராமி போலீஸில் சிக்கினார்.

 

இந்த கொலை வழக்குத் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவுக்காக குழந்தைகளை இரக்கமின்றி கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை உத்தரவை தொடர்ந்து அபிராமி கதறி அழுததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K