1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 24 மார்ச் 2016 (04:42 IST)

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் திடீர் பிளவு

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் திடீர் பிளவு

பெஸ்ட் ராமசாமி தலைமையில் இயங்கும், கொங்குநாடு முன்னேற்ற கழகம் இரண்டாக உடைந்தது.
 

 
தமிழகத்தில் மேற்கு பகுதியான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் போன்ற பகுதிகளை கொங்கு மண்டலம் என கூறப்படுகிறது. இங்கு கொங்கு கவுண்டர் இனத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் உள்ளதால் இவர்களுக்கு இங்கு முக்கியத்துவம் கிடைத்தது.
 
இந்த நிலையில், கொங்கு கவுண்டர் சமுதாயத்தின் நலன் கருதி, பெஸ்ட் ராமசாமி, மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் கட்சிகள் இயங்கி வருகிறது. 
 
இந்த நிலையில், பெஸ்ட் ராமசாமி கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில தலைமை நிலைய செயலர் பொறுப்பில் உள்ள காங்கேயத்தைச் சேர்ந்த தங்கவேல், அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மேலும், அவர் கூறுகையில், பெஸ்ட் ராமசாமி, செயல்பாடுகள் பெஸ்டாக இல்லை. வேஸ்ட்டாக உள்ளது.  இனியும் கொமுகவில் நீடித்தால்  கொங்கு சமுதாயத்திற்கு எந்த சேவையும் செய்ய முடியாது.
 
ஏற்கனவே, கொமுகவில் இருந்து 60 சதவீதம் பேர்   வெளியேறிவிட்டனர். வரும் 27 ஆம் தேதி அன்று, தீரன் சின்னமலை நினைவிடமான ஓடாநிலையில், புதிய கட்சியை தொடங்க உள்ளோம். அப்போது புதிய கட்சிக்கான  கொடியையையும் அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.