வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: சனி, 9 ஜனவரி 2016 (17:28 IST)

பாஜக கூட்டணியில் இருந்து கொங்குநாடு மக்கள் தேசியகட்சி திடீர் விலகல்

தமிழகத்தில் இரண்டு பிரதான கட்சிகளை தவிர மூன்றாவது அணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது என்று  கருத்து தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.


 

 
கரூர் டூ சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசியகட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  
 
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் “தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி. ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்தது போல் சேவல்சண்டைக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.  இந்த பொதுக்குழுவில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை எனக்கு அளித்த பிறகு நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை என்பது தெளிவாகிறது.   
 
2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை கூட்டவில்லை. தேர்தல் வெற்றியை பற்றிகூட விவாதிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் இரண்டு பிரதான கட்சிகளை தவிர மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் என்பதை நகைச்சுவையாக பார்க்கிறோம்.  
 
புதிய கூட்டணி அமைக்க நாங்கள் பிரதான கட்சி அல்ல.  வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு வடக்கு மாவட்டங்களில் உள்ள 80 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியை நாங்கள் பெற்றிருக்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.