வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (00:29 IST)

ரஜினிகாந்தின் மனைவி லதாவுடன் கிரண்பேடி சந்திப்பு

ரஜினிகாந்தின் மனைவி லதாவுடன் கிரண்பேடி சந்திப்பு

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப் பேற்றதுமுதல் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், புதுச்சேரிக்கு சுகாதாரத் துக்கான தூதுவராக செயல்பட ரஜினிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்திருந்தார். 


 


இந்நிலையில், கிரண்பேடி, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுடன் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டார்.  இது குறித்து அவரிடம் கேட்ட போது, சில நாட்களுக்கு முன்பாக சென்னை வந்த போது, தமிழக ஆளுநர் மாளிகையில் லதா ரஜினிகாந்தை சந்தித்த்தாக கிரண்பேடி தெரிவித்தார்.