திருமாவளவனை கண்டித்து போராட்டம்; நடிகை குஷ்பூ கைது!

Khusboo
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2020 (08:30 IST)
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் மன்னிப்பு கேட்க கோரி குஷ்பூ போராட்டம் நடத்த இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்கள் குறித்து இழிவாய் சொல்லப்பட்டிருப்பதாக திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில், பெண்கள் குறித்து தவறாக பேசிய திருமா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பூ கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்ட குஷ்பூவை போலீஸார் முட்டுக்காடு அருகே நிறுத்தி கைது செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :