ஜெயலலிதாவிற்கே தண்ணீர் காட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்


Murugan| Last Modified வெள்ளி, 27 மே 2016 (14:52 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்காக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்த திட்டங்களை வேண்டுமென்றே அவருக்கு பின்னர் வந்த அதே துறை அமைச்சர்கள் அழிக்க நினைக்கின்றனரா?

 

 
கரூர் தொகுதியில் கடந்த 2006, 2011 ம் ஆண்டு என இரு முறை கடந்த இருமுறை எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு, கடந்த 2011 ம் ஆண்டு அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி கொடுக்கப்பட்டது.
 
அன்றைய நாள் முதல் இன்றைய நாள் முதல் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காக பலப்பல திட்டங்களை கொண்டு வந்தார். 
 
மேலும் பஸ் பயணிகளுக்காக ரூ 10 க்கு அம்மா வாட்டர் பாட்டில், அரசு மினிபேருந்து திட்டம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதே அவரது தொகுதியை மேம்படுத்தும் வகையில் கரூர் கோட்டத்தை தனியாக நிர்ணயம் செய்து போக்குவரத்து தொழிலாளர்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து பயணிகளின் சிரமத்தை குறைக்கவும் பல திட்டங்களை தீட்டிய நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக, குற்றம் சுமத்தப்பட்டு, அவரை மாவட்ட செயலாளர் பதவி மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கியது. 
 
ஆனால் அவருக்கு பின்னர் இந்த துறையை அப்போது தொழிற்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த தங்கமணியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தற்போது, கரூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். 
 
ஆனால் செந்தில் பாலாஜி கொண்டு வந்த திட்டங்கள் என்று கூறி முந்தைய அமைச்சர் தங்கமணியும், தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தள்ளி போட்டு வருகின்றனர். இவைகள் சொல்லப்போனால் நீண்டு கொண்டே போகலாம்.
 
உதாரணத்திற்கு கரூர் பெருநகராட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு கடும் வெயிலை சமாளிக்க அம்மா குளிர்பதன பேருந்து நிறுத்தம், கரூர் பழைய பேருந்து நிலையம், தாந்தோன்றிமலை, வாங்கப்பாளையம் உள்ளிட்ட கரூர் தொகுதியில் கொண்டு வந்தார். 
 
ஆனால் அவர் கொண்டு வந்த திட்டம் என்பதால் தற்போது அதை குப்பையில் போட்டு உள்ளனர். கரூரிலிருந்து திருச்சிக்கு டவுன் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். டவுன் பஸ்ஸுக்கு சொகுசு பேருந்து, சொகுசு பேருந்து அனுப்பும் வழியில் டவுன் பஸ் என்று மாறி, மாறி செயல்படுவதோடு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதியான கரூர் தொகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வுகளை ஆய்வு செய்ய தயக்கம் காட்டும், வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் என்று எல்லை தாண்டி போவதால், முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஈடுபட்டு இருப்பதை மக்கள் தற்போது புரிந்த வண்ணம் உள்ளநிலையில், இந்த திட்டங்கள் செயல்படுத்தினால் செந்தில் பாலாஜியின் புகழ் நீடுமே என்ற கவலையா? இல்லை முதல்வரின் பெயர் மேலும் உயருமே என்ற கவலையா? என்று தெரியவில்லை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
 
எது எப்படியோ முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போதே தண்ணீர் காட்டும் அமைச்சர் பட்டியலில் வந்துள்ளார் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
 
இந்நிலையில் முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இன்று வரை தேர்தல் ஆணையத்தாலும், நீதிமன்றத்தாலும் தள்ளிப் போவதால் செந்தில் பாலாஜியோ கட்சி வேலையையும், இது போன்ற காரியங்களையும் பார்த்து கொண்டே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும், 
 
அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகாவது போக்குவரத்து துறையில் மாற்றம் ஏற்படுமா என்பது சமூக நல ஆர்வலர்களின் கருத்தாகும்.


இதில் மேலும் படிக்கவும் :