வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2016 (18:02 IST)

மனிதனே சாக்கடை அள்ளும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கலெக்டர் : கரூரில் பரபரப்பு

மனிதனே சாக்கடை அள்ளும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கலெக்டர் : கரூரில் பரபரப்பு

கரூர் சுங்ககேட் பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கழிவு நீர்களும் ஒன்று சேர்ந்து அமராவதியில் சுத்திகரிக்கப்படாமல் நேரிடையாக கலக்கும் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணியை அதுவும் மனிதர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் துவக்கி வைத்ததால் அங்கு பெரும் பரப்பு நீடித்து. 


 

 
தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சியில் மற்றும் மாநகராட்சியில் கழிவு நீர் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபடும் சில துப்புரவு பணியாளர்கள், எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லாமல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 
 
இதனால் அவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதுடன், விஷவாயு தாக்கி இறக்கும் சம்பவங்களும் நேரிடுகின்றன. அண்மையில், கரூரை அடுத்துள்ள வெண்ணைமலையில் செப்டிக் டேங்க் கிளின் செய்யும் சம்பவத்தில் இரு தொழிலாளர்கள் செப்டிக் டேங்கில் இறங்கிய போது பரிதாபமாக விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். 


 

 
இந்நிலையில் சுங்ககேட் பகுதியில் பாலத்தை அடைத்த சாக்கடையை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அதில் ஈடுபட்ட ஊழியர்கள் ஒருவர் கூட உயிர்காக்கும் உபகரணங்கள் பயன்படுத்தாமல் கைகளால் மட்டுமே கழிவுநீரை தூய்மைபடுத்தினர். 
 
இராட்சித இயந்திரங்கள் இரண்டு இருந்தும் அப்பணிகளை துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் கைகளினால் துவக்கினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கியது போலும்., கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்ததாகவும் நிகழ்ச்சி இருந்ததாக பொது நல மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


 

 
மேலும் கரூர் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மீது நிர்வாகத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்புக்காக முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ஆனால் அவைகள் பெயரளவுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் மனிதக் கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கைகளாலே அள்ள வேண்டும் என்ற அவலம் உள்ளது. குடிசைப் பகுதிகளில் இந்த அவலம் அதிகம் உள்ளது. 
 
மேலும், இதே பகுதியில் சாக்கடைக்குள் இறங்கி பணியாற்றும்போது விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒப்பந்த தொழிலாளர்கள் என்றால் அவர்களின் நிலைமை அந்தோ பரிதாபம். மனிதக் கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் உள்ளது என்றும் பொதுநல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
அதோடு 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளுவது தடை செய்யப்படுவதாகவும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை மீறி இன்னமும் மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளும் கொடுமை அரங்கேறி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். மனிதனை மனிதனாக மதிக்கும் காலம் வருவது எப்போதோ...? என்று கரூர் மக்களுக்கு புதிராக உள்ளதாக புலம்புகின்றனர்.