விஜயகாந்த் த்தூ சம்பவம் குறித்து பதிலளிக்க மறுத்த கருணாநிதி


Bala| Last Modified திங்கள், 18 ஜனவரி 2016 (13:25 IST)
ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் கருணாநிதி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

4 ஆண்டுகளில் ஜெயலலிதா சாதித்தது என்ன?" என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் கடந்த நவம்பர் மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டது.இந்த கட்டுரையை முரசொலி நாளிதழில் வெளியிட்டு, திமுக தலைவர் கருணாநிதி கட்டுரை ஒன்றை எழுதினார்.இதையடுத்து, முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன், வழக்கு ஆவணங்களை ஜனவரி 18 ஆம் தேதி நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கருணாநிதிக்கும், முரசொலி செல்வத்துக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு பெறவேண்டாம் என்றும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜக இருப்பதாகவும், கருணாநிதி அறிவித்தார். அதன்படி இன்று காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கருணாநிதியின் வருகையை ஒட்டி, வழக்கு தொடர்பானவர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி கூறியபோது,, அதிமுக அரசு எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்கிறது. நீதி நிச்சயம் வெல்லும், மக்கள் அதற்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். தேர்தலில் கூட்டணியில் சேர எந்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க மாட்டேன். வந்தால் ஏற்றுக்கொள்வேன். இந்த முடிவுக்கு நானும் கட்டுப்பட்டவன் என்றார். மேலும் செய்தியாளர்கள்மீது விஜயகாந்த் த்தூ சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் பதிலளிக்க மறுத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :