சட்டசபை கூட்டத்திற்கு "குட்பை" சொன்ன கருணாநிதி

சட்டசபை கூட்டத்திற்கு "குட்பை" சொன்ன கருணாநிதி


K.N.Vadivel| Last Updated: வியாழன், 16 ஜூன் 2016 (10:36 IST)
தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய வசதி செய்து கொடுத்தால் மட்டுமே கலந்து கொள்வார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, இந்தக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்றது.
 
அப்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபையில் திமுக எம்எல்ஏ-கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இந்தக்கூட்டத்தில், லேசான காய்ச்சல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி  கலந்து கொள்ளவில்லை. மேலும், தமிழக சட்டசபை கூட்டத்திற்கு வந்து செல்லும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டால், மட்டுமே சட்டசபைக்கு அவர் வருவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார்.
 
ஆக, இந்த சட்டசபை கூட்டத்திற்கு குட்பை சொல்லிட்டார் திமுக தலைவர் கருணாநிதி. 


இதில் மேலும் படிக்கவும் :