கர்நாடகா நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு


Abimukatheesh| Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (11:22 IST)
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து தமிழகத்தில் முழுகடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள கர்நாடகா வங்கிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

 
காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அந்த கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர், தமிழக கடைகள் அடித்து உடைக்கப்பட்டன, தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
 
இதைக்கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய முழுகடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடந்து வருகிறது.
 
சென்னையில் உள்ள கர்நாடக நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த 66 வங்கிகள், 68 உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட 171 இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :