ஆட்சிகளை தூக்கியெறிய போகும் தோழிகளுக்கு வாழ்த்துக்கள்! – கமல்ஹாசன் நூதன வாழ்த்து!

Prasanth Karthick| Last Modified திங்கள், 8 மார்ச் 2021 (11:07 IST)
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் மநீம கமல்ஹாசன் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மகளிர் தினத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “மானுட குலத்தின் சரிபாதி பெண்களென உலகு நினைக்கிறது. உயர்கிறது. நம் நாட்டில், மாநிலத்தில் அந்த நிலையா இருக்கிறது? பெண்ணுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கிற, ஊக்கப்படுத்துகிற ஆட்சிகளைத் தூக்கி எறியவிருக்கும் தோழியரே வாழ்த்துகிறேன்.” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :