எந்த ஷாவும் இந்திய ஜனநாயகத்தை மாற்ற முடியாது …ஹிந்தி திணிப்பை பொளந்து கட்டும் கமலின் வைரல் வீடியோ

Arun Prasath| Last Updated: திங்கள், 16 செப்டம்பர் 2019 (14:48 IST)
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை குறித்து பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் வைத்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரும் நடிகருமான கமல்ஹாசன் பாஜகவை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் தாய் மொழியை போல ஹிந்தி கற்க வேண்டும். ஹிந்தி மொழி தான் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்தும் மொழி” என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறினார்.

இதனை குறித்து பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரும் நடிகருமான கமல்ஹாசன், ஹிந்தி திணிப்பை விமர்சித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டு கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் மொழியையும் கலாச்சாரத்தையும் விட்டு கொடுக்க முடியாது என பல இந்தியர்கள் சொன்னார்கள்” என கூறுகிறார்.
மேலும் அந்த வீடியோவில், “எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ இந்திய கலாச்சாரத்தை திடீரென மாற்றிவிட முயற்சிக்க கூடாது எனவும், ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது சிறிய போராட்டம், எங்கள் மொழிக்காக நாங்கள் போராட் துவங்கினால் அது, அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும்” என எச்சரித்துள்ளார்.

”இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம், திணிக்க நினைத்தால் குமட்டிக் கொண்டு வரும் எனவும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை குறித்து அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :