ஓட்டுக்களை பிரிக்கும் கமல், சீமான், தினகரன்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

ஓட்டுக்களை பிரிக்கும் கமல், சீமான், தினகரன்:
siva| Last Modified வெள்ளி, 5 மார்ச் 2021 (22:08 IST)
ஓட்டுக்களை பிரிக்கும் கமல், சீமான், தினகரன்:
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் நேருக்கு நேர் மோத உள்ள நிலையில் கமல் தலைமையிலான ஒரு கூட்டணி, தினகரன் தலைமையிலான ஒரு கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கூட்டணிகள் தனித்தனியாக போடுகின்றன

இந்த மூன்று கூட்டணிகள் ஓட்டுகளைப் பிரிப்பதால் யாருக்கு பாதகம் யாருக்கு சாதகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

கமல் தினகரன் மற்றும் சீமான் ஆகிய மூவருமே ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை கூறி வாக்குகளை சேகரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆட்சிக்கு எதிராக இருப்பவர்களின் ஓட்டுக்களை தான் இவர்கள் பிரிப்பார்கள் என்று கூறப்படுகிறது
இதனால் திமுக கூட்டணிக்கு தான் பாதகம் என்றும் அதிமுக கூட்டணிக்கு சாதகம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் முடிவு வெளி வந்த பின்னர்தான் யாருக்கு பாதகம் யாருக்கு சாதகம் என்பது முழுமையாக தெரியவரும்


இதில் மேலும் படிக்கவும் :