செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 27 மே 2016 (10:40 IST)

வெகுண்டு எழுந்த ரோசய்யா - நடுங்கிப்போன தேர்தல் ஆணையம்

வெகுண்டு எழுந்த ரோசய்யா - நடுங்கிப்போன தேர்தல் ஆணையம்

தமிழத சட்டன்றத் தேர்தல் குறித்து, தமிழக கவர்னர் ரோசய்யா திடீர் கோரிக்கை விடுத்துள்ளதால், தமிழக தேர்தல் ஆணையம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. 
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை  தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் மற்றும்  குளிர்சாதப் பெட்டி, டிவிஎஸ் வண்டி என கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
 
இதனையடுத்து, அரவக்குறிச்சி மற்றம் தஞ்சை தொகுதியில் மே 23 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தன.
 
இதனால், அரவக்குறிச்சி மற்றம் தஞ்சை தொகுதியில் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
 
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதற்கு, ஜூன் 13 ஆம் தேதிக்கு தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு மே 27 ஆம் தேதிக்குள் கேட்டு முடிவு செய்ய   உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தலை வரும் ஜூன் 1 ஆம் தேதிக்கு முன்பு நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழக சட்டமன்றத் தேர்தல் விவகாரத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா நேரடியாக தலையிட்டது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.