வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2016 (01:32 IST)

அதிமுகவில் கொங்கு சமுதாயத்திற்கு முக்கியத்துவம்

அதிமுகவில் கொங்கு சமுதாயத்திற்கு முக்கியத்துவம்

தற்போது, அதிமுகவில், தேவர்களுக்கு இருந்த செல்வாக்கைவிட, கொங்கு கவுண்டர் சமுதயாத்திற்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.
 

 
அதிமுக ஆட்சிக்கு வந்த கடந்த 4 வருடங்களுக்கு மேலாக, கட்சி நிர்வாகிகளையும், ஆட்சியில் உள்ள முக்கிய நிர்வாகத்தையும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன் ஆகிய ஐவர் அணி கவனித்து வந்தனர். இந்த நிலையில், சட்ட மன்றத் தேர்தல் வரும் நிலையில், இந்த ஐவர் அணியில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியவருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
 
இவர்களுக்கு பதிலாக, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான, எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், தொழில் மற்றும்போக்குவரத்துத் துறை அமைச்சருமான, தங்கமணி, கோவை புறநகர்மாவட்டக்கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு அதிமுகவில் முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதில், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஆகிய மூன்று பேரும் கொங்கு கவுண்டர் சமுதாயத்தை சார்ந்தவர்கள். அதிமுகவில் எப்பவுமே தேவர் சமுதாயத்து தலைவர்கள் கையே ஓங்கியே இருக்கும் நிலையில், தற்போது கொங்கு கவுண்டர்கள் சமுதாயத்திற்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுத்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.