1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. "Just One Word 'Party Fund'!" – CM Vijay Shakes the Assembly and Triggers DMK Walkout

பார்ட்டி ஃபண்ட்.. முதல்வர் விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை.. ஒட்டுமொத்த திமுக எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி..

vijay udhyanidhi
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் வெடித்தது.
 
விவாதத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் "பார்ட்டி ஃபண்ட்"  என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் கொள்ளை நடந்ததாக குற்றம் சாட்டினார். தவெக அரசு அமைந்த பிறகு இந்த ஊழல் முற்றிலும் தடுக்கப்பட்டு, அந்த பணம் நேரடியாக அரசின் கஜானாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் ஆணித்தரமாக தெரிவித்தார். 
 
முதலமைச்சர் "பார்ட்டி ஃபண்ட்" என்ற ஒரே ஒரு வார்த்தையை குறிப்பிட்ட உடனே, அவையிலிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து, ஆசனங்களை விட்டு எகிறி குதித்து கூச்சல் போட தொடங்கினர்.
 
சபையில் சலசலப்பு அதிகமானதால் சபாநாயகர் அமைதி காக்கக் கோரியும் திமுகவினர் கேட்கவில்லை. இறுதியில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தைரியம் இருந்தால் அது எந்த பார்ட்டி என்று பெயர் சொல்லட்டும்" என சவால் விடுத்தார். அதற்கு சற்றும் யோசிக்காமல் மைக் பிடித்த முதலமைச்சர் விஜய், "மீண்டும் ஆணித்தரமாக சொல்கிறேன், அந்த பார்ட்டி ஃபண்ட் ஊழலை நாங்கள் நிச்சயம் ஒழிப்போம்" என்று அதே பாணியில் ரிப்பீட் கவுண்ட்டர் கொடுத்தார். 
 
இந்த நெத்தியடியை தாங்க முடியாமல், உதயநிதி ஸ்டாலினும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவையை விட்டு அலறி அடித்துக்கொண்டு உடனடியாக வெளிநடப்பு செய்தனர்.
 
Edited by Siva