செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜூன் 2025 (11:26 IST)

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக மற்றும் தவெக இடையேதான் போட்டி என்றும், அதிமுக கூட்டணி ஒரு மேட்டரே இல்லை என்று பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுகவை பொருத்தவரை, பாஜக இணைப்பு என்பது மைனஸ் தான் என்றும், பாஜகவால் 10 ஓட்டு வருகிறது என்றால், பாஜகவால் 50 ஓட்டு போகும் என்றும், அதனால் அந்த கூட்டணி பெரிதாக எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆனால் அதே நேரத்தில், திமுக கூட்டணியின் ஓட்டை விஜய் பெருவாரியாக பிரிக்கிறார் என்றும், புதிய தலைமுறை வாக்குகள்,  மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை பிரிக்கும் விஜய், சிறுபான்மையினர் வாக்குகளையும் பெறுகிறார் என்றும், அதனால் திமுக கூட்டணிக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
 
2026 தேர்தலை பொருத்தவரை, “விஜயா? உதயநிதியா?” என்ற கேள்விதான் வரும் என்றும், அப்போது விஜய் பக்கம் தான் பெரும்பாலானோர் சாய்வார்கள் என்றும், குறைந்தபட்சம் விஜய்யால் தொங்கு சட்டசபை அமைக்கும் அளவுக்கு தேர்தல் முடிவை மாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran