1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 12 மே 2015 (17:39 IST)

ஜெயலலிதா மீண்டும் பதவி விலக வேண்டியது இருக்கும்- சுப்பிரமணிய சாமி

ஜெயலலிதா மீண்டும் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
 

 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் 4 வருடம் ஜெயில் தண்டனையும், ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் 20 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
 
இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான் விசாரனை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 

 
இந்நிலையில், இன்று சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டரில், “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நான் மேல்முறையீடு செய்வேன். கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ’மோசமான கணிதத் தவறு’ உள்ளதை நிரூபிப்பேன். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தால், மீண்டும் பதவி விலக வேண்டியது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.