தருமபுரியை நோக்கி நகரும் ஜெயலலிதா புயல்

தருமபுரியை நோக்கி நகரும் ஜெயலலிதா புயல்


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (23:13 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தருமபுரியில் நடைபெற உள்ள அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
 
 
தமிழக சட்ட சபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
 
கடந்த 9 ஆம் தேதி, சென்னை தீவுத்திடலில் நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, தன்னையும் சேர்த்து 21 அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.
 
இந்த நிலையில், ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று, முதல்வர் ஜெயலலிதா தருமபுரியில் நடைபெற உள்ள பிரம்மாண்ட அதிமுக தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு கேட்க உள்ளரா்.
 
அடுத்து, வரும் 15 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 


இதில் மேலும் படிக்கவும் :