1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (11:46 IST)

ஜெயலலிதா முதல்வராக நீடிக்க முடியுமா?: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு எப்படியெல்லாம் இருக்கும் என தற்போது விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.


 
 
உச்சநீதிமன்றத்தில் உள்ள இந்த மேல்முறையீடு மனுவின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படத்தக்கூடிய இந்த வழக்கில் கர்நாடக அரசின் வாதத்தை ஏற்றால் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வாய்ப்புள்ளது.
 
இப்படி நடந்தால் ஜெயலலிதா உடனடியாக தனது முதல்வர் பதவியை இழப்பார், சிறைக்கு செல்வார். இதில் தண்டனைக்காலம் எவ்வளவு என்பதைக் கூட உச்ச நீதிமன்றம் முடிவு செய்யலாம். இதன் மூலம் ஜெயலலிதா மேலும் 6 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
 
ஜெயலலிதா தரப்பின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றால், ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரும், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படும், ஜெயலலிதா முதல்வராக தொடர்ந்து நீடிப்பார். ஆனால் கர்நாடக அரசு மறுசீரய்வு மனு தாக்கல் செய்யும்.
 
இரு தரப்பு வாதங்களையும் ஏற்று இந்த வழக்கு மறுபடியும் திரும்ப விசாரிக்க கூறி சிறப்பு நீதிமன்றத்துக்கே அனுப்பப்படலாம். இதில் கம்பெனிகளின் வருமானம் குறித்து விசாரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
 
இப்படி பல யூகங்களுடன் இந்தியாவே எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீடு மீதான தீர்ப்பு உலா வருகின்றன. விரைவில் இந்த யூகத்தில் எது தீர்ப்பாக வர இருக்கிறது, அல்லது யாரும் எதிர்பார்க்கத ஒரு தீர்ப்பு வர இருக்கிறதா என்பது தெரியவரும்.