புலிக்குட்டிக்கு பெயர் வைத்த ஜெயலலிதா


K.N.Vadivel| Last Modified புதன், 16 டிசம்பர் 2015 (23:34 IST)
சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நம்ருதா என்ற வெள்ளைப் புலி ஈன்ற, இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் புலி குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
 
 
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் செயல்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நம்ருதா என்ற வெள்ளைப் புலி இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் புலி குட்டிகளை ஈன்றது.
 
இந்த ஆண் புலிக்குட்டிகளுக்கு, தேவா மற்றும் நகுலா என்றும், இரண்டு பெண் புலி குட்டிகளுக்கு கலா மற்றும் மாலா என்றும் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி மகிழ்ந்தார். 


இதில் மேலும் படிக்கவும் :